Pages

பஞ்சபூதங்களின் தன்மைகள்

பஞ்சபூதங்களின் தன்மைகள்
பஞ்சபூதங்கள் அதன் அதன் இயல்புக்கு ஏற்ப அமைந்திருக்கும் தன்மையைக் குணங்களாகக் குறிப்பிடுவர். மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, என்னும் தன்மைகளைக் கொண்டவையாகக் குறிப்பிடுவர்.
மண்ணின் குணம் 5
நிறை, இடம், வெம்மை, தண்மை, வடிவம் என்பன.
நீரின் குணம் 4
நிறை, இடம், வெம்மை, தண்மை என்பன.
தீயின் குணம் 3
இடம், வெம்மை, வடிவம் என்பன.
காற்றின் குணம் 2
இடம், தட்பம் வெப்பம் என்பன.
ஆகாயத்தின் குணம் 1
இடம் என்பது, என்று குறிப்பிடப்படுகிறது. இதனையே பரிபாடலும் குறிப்பிடும்.

0 comments:

Post a Comment

WELCOME